தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் 66 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 50 நாட்களுக்கு பின்னர் 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதை தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.