தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக ஆட்சிக் காலத்தில் பாரபட்சங்களோ ஒதுக்கி வைப்புக்களோ இருக்கவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் மனோகணேசன் இன்று சமத்துவத்தை காணமுடியவில்லை என்று அதிருப்தி வெளியிட்டார்.
வவுனியாவல் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்டப்பட்டுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கின் அடிப்படையில் ஆட்சி செய்வதாக கூறுகின்ற போதிலும், சமத்துவத்தை இன்று காணமுடியவில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் வந்து சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய ஓர் நிலைமை உருவாகுமா என்று தாம் கேள்வி எழுப்புவதாக குறிப்பிட்டார்.
இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தமிழ்த் தேசிய இனம் உருவாகும் என்று குறி;ப்பிட்ட அவர், நாட்டை ஆட்சி செய்யும் அனைத்து அரசாங்கங்களும் ஒன்றே எனவும் அனைத்துமே திருட்டுக் கும்பல்கள் எனவும் அமைச்சர் மனோ கணேசன் வெளி;ப்படையான விமர்சனத்தை வெளியிட்டார்.