தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தமிழர் அரசியலின் மாற்றுத்தலைமையொன்று எதிர்பார்க்கப்படுவதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

446

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தமிழர் அரசியலின் மாற்றுத்தலைமையொன்று எதிர்பார்க்கப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதற்குக் கூட்டமைப்பைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் தமது தவறை உணரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவர், கூட்டமைப்பிலிருந்து தம்மை விலகச் செய்து, அதன் மூலம் தான் கூட்டமைப்பைப் பிளவுபடச் செய்துவிட்டதாகப் பிரசாரம் செய்வதற்குக் கூட்டமைப்பு தருணம் பார்த்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் புதிய கட்சியொன்றை உருவாக்குவதையே எதிர்பார்க்கின்றார்கள் என்ற போதிலும், இருக்கும் மக்கள் இயக்கத்தைப் பலப்படுத்தி முன்செல்லவே விரும்புவதாகவும், உட்கட்சிப் பேச்சுக்கள் பற்றி தனக்குத் தெரியாது என்பதுடன், அவை தனக்குத் தெரியப்படுத்தப்படுவதும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர்களாக தன்னை வெளியேற்றினால் கூட்டமைப்பை தானே உடைத்ததாக மக்கள் முன்னிலையில் கூறமுடியாமல் போய்விடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *