முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் 932 வேட்பு மனுக்கள்

325

தமிழ்நாடு மக்களவை தேர்தல் தொகுதிகள் 39ல் தாக்கல் செய்யப்பட்ட 1587 வேட்பு மனுக்களில் 932 மனுக்கள் தேர்தல் ஆணயத்தால் தேர்தலில் பங்கு கொள்ள ஏற்கப்பட்டு உள்ளன. 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பங்கு கொள்ள தாக்கல் செய்யப்பட்ட 518 மனுக்களில் 213 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. 305 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

39 மக்களவைத் தொகுதிக்ளில் கரூர் தொகுதியில்தான் அதிகபட்சமாக 43 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

நீலகிரி தொகுதியில்தான் மிகக்குறைந்த அளவாக 10 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

தாக்கல் செய்துள்ள வேட்பு மனுக்களை, வேட்பு  மனு தாக்கல் செய்த வேட்பாளர்களே வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 29ந்தேதி – வெள்ளிக்கிழமை ஆகும்.

நாளை தேர்தல் சின்னம் ஒதுக்கீடு

வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை நாளை ஒதுக்கும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ நிருபர்களிடம் இன்று கூறினார்.

அமமுகவுக்கு பொது  சின்னம் ஒதுக்குவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யும் என்றும் சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

தேர்தல் வழக்குகள்

அரசியல் கட்சிகள் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. திமுக மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுக மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவும் சத்ய பிரதா சாஹூ கூறினார்.

தமிழகத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் மார்ச் 27 வரை 223 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் சத்ய பிரதா சாஹூ கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *