முக்கிய செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

122

வியாழேந்திரன் எம்பி உட்பட பத்து பேருக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் மேற்படி நபர்கள் வகித்துவந்த பதவிகளை வறிதாக்கி புதிய நபர்களை நியமிக்க தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்கள் வருமாறு,

– எம்பி – வியாழேந்திரன் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி).

– நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் – பிலிப் பற்றிக்ரோசன் (தமிழீழ விடுதலை இயக்கம்).

– மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் – இரா.அசோக்.

– மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் – யூசைமுத்து பிலிப்.

– பிரதேச சபை உறுப்பினர் – தோமஸ் சுரேந்தர் ( மண்முனைப் பற்று பிரதேச சபை)

– ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் –  வ.சந்திரவர்ணன்.

– ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் – சி.சிவானந்தன்.

– கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினர் –  பா.முரளிதரன்.

– பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் – க.கோணேஸ்வரநாதன்.

– உறுப்பினர் – குஞ்சித்தம்பி ஏகாம்பரநாதன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – அம்பாறை).
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *