முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றாவிடின் அரசியல் யாப்புச் சபையில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகும்.

1371

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றாவிடின் அரசியல் யாப்புச் சபையில் இருந்து விலகுவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிப்பதற்காக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம் தலைமையில் இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்த் தெரிவித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன், இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆறு உப குழுக்களும் அர்த்தமுள்ள விதத்திலே அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்று ஒரு முகமாக பரிந்துரைத்திருப்பதாக கூறியுள்ளார்.

ஆயினும் அதிகாரப் பகிர்வு தொடர்பிலான முடிவுகளை எட்டுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக அதுபற்றிய முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும், இது விடயத்தில் தமிழ் மக்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கிய அறிக்கைகளை இந்த உபகுழுக்கள் வழிநடத்தல் குழுவுக்கு சமர்ப்பித்திருக்கின்றன என்றும், அந்த அறிக்கைகளைப் பார்த்தால், முற்று முழுதாக அர்த்தமுள்ள வகையிலே அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்கின்ற சிபாரிசுடனேயே அந்த அறிக்கைகள் வந்திருக்கின்றன எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த அறிக்கைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், அவைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழு இதுவரையில் 31 தடவைகள் சந்தித்து,  புதிய தேர்தல் முறை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று அதிகார முறை ஆகிய மூன்று விடயங்கள் குறித்து விவாதித்திருக்கின்றன என்றும், பல விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதுடன் இன்னும் இணப்பாடு எட்டப்பட வேண்டிய விடயங்களும் இருப்பதாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் இணக்கர் காணப்பட்ட விடயங்கள் தொடர்பிலோ, அல்லது இணக்கப்பாடு எட்டப்படாத விடயங்கள் குறித்தோ எதுவும் பேசுவதில்லை என்று தாங்கள் அனைவரும் தீர்மானித்திருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் முடிவு எட்டப்படாத நிலையில் தகவல்களை வெளியிட்டால், அது இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களிலும் இணக்கப்பாடு எட்டப்படுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இன்னும் இரண்டு மாதங்களில் இதுபற்றிய முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அதுவரையில் மக்கள் பொறுத்திருக்க வேண்டும் எனவும், இதேவேளை மக்களது அபிலாசைகளை எய்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு சட்டம் உருவாகாது விட்டால் நாங்கள் வெளிநடப்பு செய்வோம் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *