முக்கிய செய்திகள்

தியாகதீபம் திலீபன் அவர்கள் உணவுத் தவிர்ப்பினை ஆரம்பித்த இன்றைய நாள் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுகிறது.

2132

தமிழ் மக்களின் விடியலுக்காக ஆகுதியான தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த இன்றைய நாள் தமிழர் வாழும்பிரதேசங்கள் எங்கும் நினைவுகூறப்படுகிறது.

29 ஆண்டுகளின் முன்னர் இன்றைய நாளில் அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்த நல்லூர் ஆலயச் சூழலிலும், அவரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியிலும் இன்று காலை மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அவரை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 1987 ஆம் ஆண்டு 5அம்சக் கோரிக்கைகயை முன்வைத்து நல்லூர் ஆலயத்தின் வடக்குபக்கத்தில்  நீராகாரம் எதுவும் இன்றிய தனது உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த தியாக தீபம் திலீபன், தனது உறுதியான நிலைப்பாட்டுடன் போராட்டத்தை இறுதியவரையில் தொடர்ந்து 12 நாட்கள கடந்த நிலையில் செப்ரெம்பர் மாதம் 26ஆம் நாள் ஈகைச் சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *