முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழ் மக்களுக்கு பொருத்தமான தீர்வை வழங்கத்தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என தியாகி திலீபனின் நினைவு நிகழ்வில் சிறீதரன் தெரிவித்துள்ளார்

1448

தமிழ் மக்களுக்கு பொருத்தமான தீர்வை வழங்கத்தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்திய அரசுகளுக்கு எதிராக 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 1987ம் ஆண்டு உண்ண நோன்பு இருந்து உயிர் நீத்த லெப் கேணல் திலீபனின் 29 வது ஆண்டு நிகழ்வு கடந்த ஏழு ஆண்டுகளின் பின்பு கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் இடம் பெற்ற பின்பு அகிம்சை வழியிலான போராளிகளை நினைவு கூருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வகையில், நேற்று கிளிநொச்சி அறிவகத்தில் எழுச்சி பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சிறிதரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய நீண்ட போராட்ட வரலாற்றிலே எமது தலைமைகள் பலவிட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு அரசுடனான சமாதான முயற்சிகளில் பங்கு பற்றிய வரலாற்று பின்னணியில், அகிம்சை ரீதியிலான எமது முயற்சிகள் சவாலுக்கு உட்பட்டபோதே ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டது என்பதனை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதத்தை எமது இனம் கையாண்ட முறைகளுக்கு மேலாக சனநாயக ரீதியிலும் எமது முயற்சிகள் இருந்தது எனவும், எமது அறவழிப் போராட்டங்கள் மாத்திரம் அன்றி, தியாகி திலீபன் அன்னை பூபதி போன்றோரின் இத்தகைய தியாகங்களும், நாங்கள் சனநாயகம் மீது கொண்டு இருந்த விருப்பத்தின் வெளிப்பாடுகளே என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றும் அனைத்துலக சமூகத்தின் பார்வையில் கூட்டமைப்பின் தலைமை முடிந்தளவு விட்டுக்கொடுப்புக்களுடன் தீர்வு நோக்கி பயணிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனவும், நியாயமான தீர்வை பொருத்தமான இக்கால கட்டத்தில் முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதன் ஊடாக இலங்கையில் நீடித்த சமாதானம் நிலைபெற வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ள சிறிதரன், இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த தவறினால் தியாகி திலீபன் அவர்களது கனவாகிய மக்கள் புரட்சி இந்த மண்ணில் வெடிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *