தலைமன்னார் மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

44

தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த 14 வயதுடைய பாலச்சந்திரன் தருண் என்ற மாணவன் உயிரிழந்ததுடன், மாணவர்கள் பொது மக்கள் என 25 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்த விபத்திற்கு நீதி கோரி இன்று காலை 7.45 மணியளவில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக, மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள தொடருந்து கடவை வரை பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் , தொடருந்து திணைக்கள அதிகாரி ஆகியோரிடம் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *