தலைமை தேர்தல் அதிகாரி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

16

தமிழகத்தில் நாளை இரவு 7 மணிக்குப் பின்னர், தொகுதியுடன்  தொடர்பு இல்லாதவர்கள் வெளியேறி விட  வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.

வரும் 6 ஆம் நாள் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இறுதிநாளில்  பிரச்சாரத்திற்கு கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளதால், நாளை இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யலாம்.

அதற்குப் பின்னர் தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது. 

நாளை இரவு 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *