திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார்

489

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு கேளர முதல்வர் இன்று தமிழகம் சென்றுள்ளார்.

சென்னையில் காவேரி மருத்துவமனைக்கு சென்றிருந்த அவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரிடமும் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய கேளர முதல்வர், கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றிருக்கிறது என்றும், தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

கருணாநிதியைப் பிறவிப் போராளி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *