முக்கிய செய்திகள்

தலைவர் தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள்

44

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர் தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள் நிகழ்வு இன்று மட்டக்களப்பு, வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.

மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா பூங்காவில் இன்று காலை நடந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா, சிறிநேசன், அரியநேத்திரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை வவுனியாவிலும் தந்தை செல்வாவின் 123வது பிறந்தநாள் நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்திக்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *