முக்கிய செய்திகள்

தலைவர் மேதகு பிரபாகரனின் படத்திற்கே சிறிலங்கா அரசு அஞ்சுகிறதா?; சீ.வீ.கே.

148

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்திற்கே சிறிலங்கா அரசு அஞ்சுகிறதா என வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தமைக்காக உதயன் பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த ஊடகச் செய்தியை நான் முதலில் நம்பவில்லை.

ஆனால் இப்பொழுது அவ்வாறான செய்தி சரியானது எனத் தெரிகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை ஆச்சரியமானதும் அதிர்ச்சியளிப்பதுமானதாகவே காணப்படுகின்றது.

சிறிலங்காவில்  தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் வெளிவரும் சகல அச்சு ஊடகங்களிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும்1986 ஆம் ஆண்டிலிருந்தே விடுதலைப்புலிகள் தொடர்பான செய்திகளும், தலைவர் மேதகு பிரபாகரனது புகைப்படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறிருக்கையில் திடீரென தற்போது ஏன் புகைப்படத்தினை பிரசுரித்தமைக்காக வழக்குத் தொடரப்படுகின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *