கடத்தல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைவர் என்ற சந்தேகத்தின் பேரில் கறுப்பின இளைஞர் பீல் பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும் குறித்த நபர் அந்த சம்பவத்துடன் எவ்விதமான தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணைகளிலேயே தெரியவந்தது.
இதனை அடுத்து, அவர் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
தவறுதலாக இடம்பெற்ற இந்தக் கைதுக்கான காரணங்கள் விரைவில் கண்டறியப்படும் என்று பீல் பிராந்திய காவல்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.