முக்கிய செய்திகள்

தாடுப்பூசிக்கான வயதெல்லை குறைக்கப்பட்டமைக்கு வரவேற்பு

223

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை பெறுவதற்கான வயதெல்லை 40 ஆக குறைக்கப்பட்டுள்ளதற்கு, சமூக ஊடகங்களில் மருத்துவர்கள் பலத்த ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, Michael Garron மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவரான மருத்துவர் மைக்கல் வோர்னர் (Michael Warner),  இந்த மாற்றம் ஒரு மிகப் பெரிய நகர்வு என்று தெரிவித்துள்ளார்.

யோர்க் பிராந்தியத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவராகப் பணியாற்றும் ஸ்டீவ் பின்டல், (Steve Flindall), தனது கீச்சகப் பதிவில், “ வார இறுதிகளில் நான் பார்த்த சிறந்த செய்தி இது என்றும், இந்த வாரம் தனது மனைவிக்கு தடுப்பூசி போடலாம் என்ற எண்ணத்தில் கண்கள் பனித்து விட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஒன்ராறியோ லிபரல் கட்சியின் தலைவர்  ஸ்டீவன் டெல் டுகா (Steven Del Duca)  18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *