திக்ரே பிராந்திய கொலை தொடர்பில் நேரடிச்சாட்சியம் தகவல்

25

எதியோப்பியாவில் திக்ரே (Tigray) பிராந்தியத்தில், தமது கண்களுக்கு முன்பாகவே அரசுப் படைகளால் நான்கு பேர் படுகொலை செய்ய்யப்பட்டுள்ளனர் என்று பிரெஞ்சு மருத்துவக் உதவிக் குழுவான MSF தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இராணுவ வாகனத் தொடரணி ஒன்று தாக்குதலுக்கு இலக்கானதை அடுத்து, இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக MSF அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு சிறிய பேருந்துகள் வழிமறிக்கப்பட்டு, அதிலிருந்து நான்கு ஆண்கள் எதியோப்பிய அரச படையினரால் வெளியே இழுத்து வரப்பட்டு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான அடையாளம் பொறிக்கப்பட்ட வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூன்று MSF பணியாளர்கள் அப்போது பயணம் செய்து கொண்டிருந்தனர் என்றும், குறித்த பேருந்துகளுடன் அந்த வாகனமும் அரச படைகளால் மறிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர், MSF வாகனத்தை பயணிக்க அனுமதித்த அரச படையினர் மீண்டும் அதனை நிறுத்தி, சாரதியை வெளியே இழுத்து தாக்கினர் என்றும், MSF குற்றம்சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என்றும் எதியோப்பியா அறிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *