முக்கிய செய்திகள்

தினமும் 2 ஜிபி இணைய டேட்டா, இலவசமாக வழங்கப்படும்

42

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு, தினமும் 2 ஜிபி  இணைய டேட்டா,  இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு வசதியாக, எல்காட் நிறுவனம் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு  இந்த இணைய வசதி வழங்கப்படவுள்ளது.

ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான நான்கு மாதங்களுக்கு இந்த இலவச இணைய வசதியை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருவதால், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 இலட்சத்து 69 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த வசதி கிடைக்கவுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *