முக்கிய செய்திகள்

திருகோணமலையில் தமிழர் கிராமத்தை காப்பாற்ற தமிழ்இளைஞர்கள் போராட்டம்!

264

திருகோணமலையில் தமிழர் கிராமத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் தமிழ்இளைஞர்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா பிரதேச சபை ? என கேள்வி எழுப்பினர்.

நீங்கள் நினைக்கலாம் தமிழ் கிராமம் ஒன்றில் புதிதாக மாற்றினத்தவர் குடியேறி காணிகளை அபகரித்தால்தான் ஒரு கிராமம் பறிபோகுன்றது என யோசிக்கலாம்.
ஆனால் உண்மையிலே காணிகள் பிடிப்பதை விட ஒரு இனத்தின் பண்பாட்டை ,கலாச்சாரம் ,சமூக கட்டமைப்பை சீர்குலைத்தாலே போதும் ஒரு தமிழர் ஊர் பறிபோகின்றது என கருதலாம்.
இப்படி கைங்கரியான செயற்பாடுகள் திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேசசபைக்கு உட்பட்ட அலஸ்தோட்டம் எனும் அழகிய கடற்கரை கிராமத்தில் தமிழின கலாச்சார சீரழிவுக்கும் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பலசம்பவங்கள் தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தமிழரின் பண்பாடு கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் அளவு பணம் படைத்த ஜாம்பவான்களால் உடற்பிடிப்பு நிலையம் அதாவது ஆயுள்வேத மசாச் நிலையங்கள் எனும் பெயரில் அலஸ்தோட்டமும் அதை சூழவுள்ள கடற்கரை கிராமங்களில் இயங்கிவருகின்றது.இதன் மூலம் பல விபச்சாரங்களும் சமூகத்தையே அழிக்கும் பாலியல் நோய்கள் இக்கிராமத்திற்கு சிறிதும் சம்பந்தமற்ற வெளியூர் பெரும்பான்மையினத்தவர்களால் அந்த பெண்களை கொண்டு நடைபெற்று வருகின்றது,இதை இப்படியே பார்த்துக்கொண்டிருப்பதால் நாமே நமது கிராமத்தின் பண்பாடு கலாச்சாரத்தை மற்றையவர் எள்ளி நகையாட விட முடியாது எனும் ஆதங்கத்துடன் வேதனையுடன் இன்று விடுமுறை நாள் இல்லாத போதும் தமது கடமைகளை புறக்கணித்து கிராமத்தை காப்பாற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழின பற்று இளைஞர் அமைப்புகள்,மகளிர் அமைப்புகள்,பாடசாலை மாணவர்கள்,விளையாட்டு கழகங்கள்,ஆலய தலைவர்கள் ,இராவண சேனைஅமைப்புகள் இவ் ஆர்ப்பாட்டத்தை நடத்தி ஊர்வலமும் செய்தார்கள்.

இதில் பலவாசகங்கள் அலஸ்தோட்ட ஊர் மக்களின் கோரிக்கைகளாக கையில் பிடித்திருந்த பதாதைகள் புடம் போட்டு காட்டின. அவையான சில!

“இன்றைய உடல் பிடிப்பு நிலையம் நாளைய எயிட்ஸ் போன்ற பாலியல் நோயின் ஆரம்பம்”

சட்டவிரோத,சட்டபூர்வமான உடல்பிடிப்பு நிலையங்கள் எமது அலஸ்தோட்ட கிராமத்திற்கு தேவையா???

உடல்பிடிப்பு நிலையங்களால் அலஸ்தோட்டத்தில் தமிழின கலாச்சார சீரழிவு இடம்பெறுவது உப்புவெளி பிரதேச சபை கண்களுக்கு தெரியவில்லையா?,?

உங்களுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய எங்கள் கிராமமா கிடைத்தது???

உப்புவெளி பிரதேச சபையே எங்களுடைய கோரிக்கையை ஏற்று உடல் பிடிப்பு நிலையம் வேண்டாம்,

என பல்வேறு பட்ட கோரிக்கைகளுடன் தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவருகின்றது,
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *