முக்கிய செய்திகள்

திருகோணமலை துறைமுகத்தை நவீனப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

259

திருகோணமலை துறைமுகத்தை நவீனப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சர் சாகல ரத்நாயக்க இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்களில் வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயற்படும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன.

”திருகோணமலையை ஒரு ஏற்றுமதி வாய்ப்புள்ள கேந்திர நிலையமாக இலங்கை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. எனவே, சரக்கு கப்பல்களைக் கையாளுவதற்கான மேலும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக, இரவு நேரத்திலும், துறைமுகம் செயற்படக் கூடிய வகையில் புதிய டேடார் கருவி பொருத்தப்படவுள்ளதுடன், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளன.

இயற்கைத் துறைமுகமான திருகோணமலையை பொருளாதார வாய்ப்பாக பயன்படுத்தும் வகையில், ஏப்ரல் மாதம், இரவில் இயங்கக் கூடிய வசதி செய்யப்படும்.

ஜப்பானின் அனைத்துலக கூட்டுத்தாபனத்தின் 1 பில்லியன் யென் உதவியுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். காலி துறைமுகமும், இரவு நேரத்தில் செயற்படும் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *