முக்கிய செய்திகள்

திருநங்கைகளுக்கு தடையை நீக்குகிறது அமெரிக்கா

32

இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான பென்டகனின் தடையை நீக்கும் வகையில் ஜனாதிபதி ஜோ பைடன் இன்று நிறைவேற்று ஆணையில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி ஏ.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

திருநங்கைகளால் திறந்த சேவையை அனுமதிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளை கடந்த 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் மாற்றியமைத்தார்.

இந்நிலையிலேயே இன்று நடைபெறும் வெள்ளை மாளிகை விழாவில் புதிய பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஒஸ்டின் (Lloyd Austin) கலந்துகொள்வதுடன், அங்கு இந்த கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெறும்  என்று இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *