முக்கிய செய்திகள்

திருமலையில் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள்

40

திருகோணமலையில் கடந்த 12 மணித்தியாலங்களில் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி குச்சவெளியில் ஒருவருக்கும் மூதூரில் 5 பேருக்கும் உப்புவெளியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய திருகோணமலையின் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி கோமரங்கடவலயில் இதுவரையில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், கிண்ணியாவில் மொத்தமாக 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, குச்சவெளியில் 2  பேருக்கும் மூதூரில் மொத்தமாக 41 பேருக்கும் சேருவிலயில் 3 பேருக்கும் இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தம்பலகாமன் பகுதியில் 6 பேருக்கும்  திருகோணமலையில் 64 பேருக்கும் உப்புவெளியில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *