முக்கிய செய்திகள்

தி.மு.க. கூட்டணி வெற்றிப் பெறும்; கருத்துக்கணிப்பில் தகவல்

29

தமிழக தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில், இம்முறை தி.மு.க. கூட்டணி வெற்றிப் பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டைம்ஸ் நவ் (TIMES NOW) தொலைக்காட்சியும், சி வோட்டர் (C VOTER) நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில்  இத்தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி தி.மு.க. கூட்டணிக்கு 177 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 49 இடங்களும், மக்கள் நீதி மய்யத்திற்கு 3 இடங்களும், அ.ம.மு.க. கூட்டணிக்கு 3 இடங்களும் ஏனைய கூட்டணி கட்சிகளுக்கு 2 இடங்களும் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு வீதத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 46 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 34.6 சதவீத வாக்குகளும் கிடைக்கப்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *