ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம், எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
“இன்னமும் இந்த தீர்மான வரைவு, தொடர்பாக இணக்கம் ஏற்படுத்தப்படவில்லை.
அத்துடன் இந்த தீர்மானம் வரைவு மீதான வாக்கெடுப்பும் இன்னமும் நிகழ்ச்சி நிரலில் அட்டவணைப்படுத்தப்படவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இதுவரை 21 நாடுகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இது ஒரு முக்கியமான அடைவாகும்.
அனுசரணை நாடுகளின் தீர்மானம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்பதே சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்..” என்றும் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.