முக்கிய செய்திகள்

தீவிரமாகிறது பண்டிகை கால கொரோனா தடுப்புச் செயற்பாடுகள்

99

பண்டிகைக் காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கமைய, பண்டிகைக்கால  கொள்வனவுகளில் ஈடுபடுபவர்கள், பயணங்களை மேற்கொள்பவர்களை இலக்கு வைத்து, சிறிலங்காவின் முப்படைகள், காவல்துறையினர், மற்றும் சுகாதாரத் துறையினர், நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனால், பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கிய துண்டுச் சீட்டு ஒன்றையோ அல்லது அறிமுக அட்டைகளையோ எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண அறிவித்துள்ளார்.

குறிப்பாக, பண்டிகைக்கால கொள்வனவுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் இவற்றில் ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முப்படையினர், காவல்துறையினர், சுகாதார அதிகாரிகள் கேட்கும் போது இவற்றைக் கொடுக்க முடியும் என்றும், அவர் அறிவுறுத்தியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *