முக்கிய செய்திகள்

தீவிரவாதிகள் நடத்திய எறிகுண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் காயம்

36

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், தீவிரவாதிகள் நடத்திய எறிகுண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியில் பேருந்து நிலையம் அருகே, பாதுகாப்பு படையினரை நோக்கி, எறிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எறிகுண்டு குறி தவறி சந்தைப் பகுதியில் விழுந்து வெடித்ததில் பொதுமக்கள் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்மந்தப்பட்டு பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *