தீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.

248

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள மடகஸ்காருக்கும், மொஸாம்பிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள பிரான்ஸிற்கு சொந்தமான  லா ரியூனியன் (La Réunion) மற்றும் மயோட் (Mayotte) ஆகிய தீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.

அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செய்தி நிறுவனமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஜுன் மாதமம் வரையான காலப் பகுதியில் மாத்திரம் 291 இலங்கையர்கள், குறித்த தீவுகளில் அகதி அந்தஸ்த்து கோரி தஞ்சதடைந்துள்ளதாக ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், அகதிகள் அந்தஸ்த்து கோரப்படும் விண்ணப்பங்கள் பிரான்ஸ் அரசாங்கத்தினால் அதிகளவில் நிராகரிக்கப்ப்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பிரான்ஸ் அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் அகதி அந்தஸ்த்து கோரிய இலங்கையர்கள் குறித்து  நெகிழ்ச்சி தன்மை காண்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் வரை அங்கு சென்ற 120 இலங்கை அகதிகளில் 34 பேருக்கான தஞ்சக் கோரிக்கையை ஏற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 60 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 120 பேரில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *