முக்கிய செய்திகள்

தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு முறைப்பாடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்க்பபட்டுள்ளது

406

தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு முறைப்பாடு குறித்து இலஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் இலஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினரிடம் அளித்த முறைப்பாடு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி திராவிட முன்னேற்றக் கழத்துட மாநிலங்களவை உறுப்பினரான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அவர் தமது மனுவில் பன்னீர்செல்வம் மாநில அமைச்சர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக சொத்துக்களை குவித்து தனது மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், சுப்புராஜ் என்ற தனது நண்பர் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் பேரில் முதலீடு செய்துள்ளார் என்று தெரிவித்து்ளளார்.

தனது மகன்களான ரவீந்திரநாத் குமார், ஜெயப்ரதீப், மகள் கவிதாபானு ஆகியோர் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, துருக்கி, இந்தோனீஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளனர் என்றும் முறைப்பாடு செய்துள்ளார்.

25 வயது கூட நிரம்பாத அவரது மகன் 3 நிறுவனங்களில் இயக்குநராக செயல்பட்டு வருகிறார் என்பது உள்ளிட்ட சில விடயங்களையும் தமது மனுவில் உடள்ளடக்கி உள்ளார்.

இந்த நிலையிலேயே தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு முறைப்பாடு குறித்து இலஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *