முக்கிய செய்திகள்

துனிசியாவில் முதல்முறையாக பெண் பிரதமர் தெரிவு

3072

வடஆபிரிக்க நாடான துனிசியாவில், முதல்முறையாக நஜ்லா பவுடன் ரோம்தனே (Najla Bouden Romdhane) என்ற பெண், பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

உயர்கல்வி அமைச்சின் இயக்குனரான இவர், ஏற்கனவே உலக வங்கியில் பணியாற்றியவர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் முந்தைய அரசாங்கத்தை கலைத்து ஜனாதிபதி காயிஸ் சயிட் (Kais Saied ) உத்தரவிட்டதை அடுத்து, கடந்த 2 மாதங்களாக நாடாளுமன்றம் முடங்கிப் போய் இருந்தது.

இந்தநிலையில் கடந்த வாரம் புதிய அரசை அமைப்பது தொடர்பாக நஜ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்ட ஜனாதிபதி காயிஸ் சயிட் (Kais Saied ) அவரை பிரதமராக நியமிக்க முடிவு செய்துள்ளார்.
துனிசியாவில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நஜ்லா 10-வது பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *