முக்கிய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுக் உள்ளாகிய 14 வயது சிறுவன் படுகாயம்

225

ரொறன்ரோ Islington Avenue வில் துப்பாக்கிச் சூட்டுக் உள்ளாகி, 14 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் கிடைத்த அழைப்பை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவசர சேவை பணியாளர்களால், காயமடைந்த நிலையில் இருந்த சிறுவன் மீட்கப்பட்டதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வாகனங்களில் இருந்து மாறி மாறி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பூங்காவில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக காயமடைந்த சிறுவனும், தந்தையும் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போதே, துப்பாக்கிச் சூட்டில் அகப்பட்டுக் கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

காலின் மேற்பகுதியில் பலத்த காயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *