துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

50

ஹரியானா மாநிலத்தில், மல்யுத்த பயிற்சி மையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரோத்தக் நகரில் உள்ள மல்யுத்த பயிற்சி மையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில், மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் ஆத்திரத்தில் நடத்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பயிற்சியாளர் சுக்வீந்தர் சமீபத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அவரை பணியில் இருந்து நீக்கிய அதிகாரி உள்ளிட்ட 5 பேரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *