துருக்கியில் தொடரூந்து தடம் புரண்டதில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரிப்பு

373

துருக்கி நாட்டில் பயணிகள் தொடரூந்து தடம் புரண்டதில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.

பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு 360 பேருக்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட தொடரூந்தின் 6 பெட்டிகள் தடம்புறண்டதாக தெரிவிக்கப்பட்டது.

விபத்து ஏற்பட்டதற்கான உறுதியான காரணம் தெரியாத நிலையில், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று துருக்கி தொடரூந்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் துருக்கியில் நடந்த மிகப் பெரிய தொடரூந்து விபத்தாக இது கருதப்படுகிறது என்று துருக்கி ஊடகங்கள் கூறியுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *