துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை

34

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்கியுள்ள துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது.

400 கி.மீ தொலைவில் வரும், எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்ற ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை  ரஷ்யாவிடம் இருந்து துருக்கி வாங்குவதற்கு, அமெரிக்க எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

அந்த எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை துருக்கி வாங்கியுள்ளது.

இந்தநிலையில், நேட்டோ உறுப்பினராக இருந்து கொண்டு ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை  வாங்கியதால் கடும் கோபமடைந்த அமெரிக்கா துருக்கி பாதுகாப்புத்துறை தொழில் பணியகம் மற்றும் அதன் தலைவர் மற்றும் 3 நிர்வாகிகள் மீது பொருளாதாரத்தடை விதித்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைக்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடை முடிவு துருக்கியின் இறையாண்மை உரிமைகள் மீது நடத்தப்படும் வெளிப்படையான தாக்குதல் என்று துருக்கி ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *