முக்கிய செய்திகள்

தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு, காட்டுமிராண்டித்தனமானது

169

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளியாக இருந்த அனைவரும், அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும், உடனடியாக நினைவுத்தூபி மீள நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

“ யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு, காட்டுமிராண்டித்தனமானதும் நியாயமாக சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதானதும் அல்ல.

இது அனுமதியின்றி கட்டப்பட்டது என்றும் அதன் காரணமாக அது அகற்றப்பட வேண்டிய ஒன்று என்று கூறுவது, இந்த மிலேச்சத்தனத்தை இன்னும் மோசமாக்கும் செயலாகும்.

யுத்த நினைவு தூபமொன்று நிறுவப்படுகிற போது அது இறந்தவர்களை நினைவுகூரும் ஒரு புனித பூமியாகிறது. அதனால்தான் இந்த தூபி உடைத்தழிக்கப்பட்ட போது பெரு வெள்ளமாக உணர்வுகள் வெளிவந்தன.

இந்த கொடூரச் செயலைக் கண்டித்த ஒன்டாறியோ முதல்வர் டக் போட், தென் ஆசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தாரீக் அஹமது, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், முஸ்லீம், சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இந்த விடயம் “தீர்க்கப்பட்டது” என்பதில் எமக்கு முழு உடன்பாடு கிடையாது.

தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் இந்த விடயத்தை சற்று “தணிக்குமாறு” அரசாங்கம் தனக்குச் சொன்னதாக துணைவேந்தர் கூறுவதை நாம் செவிமடுத்தோம். அத்திவாரக் கல் வைத்தது, செய்த தவறுக்கு வருந்தி அதை திருத்துவதாக இல்லாமல், வெறுமனே “தணிப்பதற்கான” ஒரு நடவடிக்கையாக இருந்தால், அது ஆரம்பத்தில் தூபியை உடைத்ததை விட மோசமான செயலாகும்.” என்றும் சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *