முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா சாதனை

2112

தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மாணவி ஜெக­தீஸ்­வரன் அனித்தா, கோலூன்றிப் பாய்­தலில் புதிய இலங்கை சாத­னையை நிலை­நாட்டி பெரும் பாராட்டைப் பெற்றார்.

திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நிறைவு பெற்ற 86ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளி­லேயே அனித்தா புதிய இலங்கை சாத­னையை நிலைநாட்­டினார்.

20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் 3.35 மீற்றர் தாவி­யதன் மூலம் அவர் புதிய இலங்கை சாத­னைக்கு சொந்தக்­கா­ரரானார்.

அத்­துடன் இந்த மூன்று நாள் போட்­டி­களில் ஒரே ஒரு இலங்கை சாத­னையை நிலை­நாட்­டிய பெரு­மையும் அனித்­தாவை சாரு­கின்­றது.

இதன் மூலம் இவ்வாண்டு நடை­பெற்ற கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் வலல்ல ஏ. ரட்­நா­யக்க மத்­திய கல்­லூ­ரியைச் சேர்ந்த ஹர்ஷனி தர்­ம­ரட்­ன­வினால் நிலை­நாட்டிப்பட்ருந்த 3.34மீற்றர் என்ற இலங்கை சாத­னையை அனித்தா முறி­யடித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *