முக்கிய செய்திகள்

தேசியத் தலைவரின் 62ஆவது பிறந்தநாள் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

1130

தமிழீழ தேசியத் தலைவ்ர மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாளை தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.

புலம்பெயர் தேசங்களில் சிறப்பான முறையில் கொண்டாட்ட்ஙகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், தாயத்தில் அவ்வாறான சூழ்நிலை இல்லை என்ற நிலையில், அடக்குமுறைக்கு மத்தியில் மறைமுகமான முறையிலேயே மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் தலைவரின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  இன்று நண்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பல்கலைகழக சமூத்தினரால்  சிறப்பு நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கின் முன்பாக, அலங்கரிக்கப்பட்ட இடத்தில் தேசியத் தலைவரின்  உருவப்படம் வைக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளை கிளிநொச்சியில் பல பிரதேசங்களில் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வாசகங்களைக் கொண்ட துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *