தேசத் துரோக வழக்கிலிருந்து வைகோ விடுதலை

1068
கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன?  என்ற தலைப்பில்  சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டம் ஒன்றில் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துக்களை பேசினார். அப்போது காங்கிரஸ் அரசு  ஆட்சியிலிருந்தது. வைகோ பேசியதை கியூ பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்… பின்னர் 2009ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வழக்கின் விசாரணை இன்று 3வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி அருள் முருகன் முன்னிலையில் வந்தது… அப்போது, அரசு தரப்பில் 17சாட்சியங்கள் அளித்த தகவலின்படி 35கேள்விகள் கேட்கபட்டது.
கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய வைகோவிடம் ,நீதிபதி உங்கள் தரப்பில் சாட்சியங்கள் இருக்கிறதா என்று கேட்டார், அதற்கு சாட்சியங்கள் இல்லை என வைகோ தெரிவித்தார், மேலும் நான் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியது உண்மை தான் ஆனால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என்று தவறாக பதிவு செய்துள்ளனர் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று 20ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *