முக்கிய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் ஹிலாரி கிளிண்டன்

1388

நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், வடக்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற நிதி திரட்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டியுள்ளார்.

கடந்த வார இறுதியில் நிமோனியா காய்ச்சலால் ஹிலாரி கிளிண்டன் பாதிக்க்பபட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டதுடன், கடந்த 12ஆம் நாள் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது தேர்தல் பிரசார கூட்டமும் நிறுத்திவைக்க்பபட்டது.

அவரின் உடல்நலக்குறைவை எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தொண்டர்கள் சாதகமாக பயன்படுத்தி தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், உடல்நலக்குறைவால் அவதிப்படும் ஹிலாரி கிளிண்டன் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்ற விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள கிரீன்ஸ்போரோ பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஹிலாரி கிளிண்டன், வலிமையான அமெரிக்கா என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார்.

அப்போது ஊடகவியலாளருக்கும் பேட்டி வழங்கியிருந்த அவர், தனக்கு ஏற்பட்டிருந்த நுரையீரல் தொற்றுக்கு உரிய சிகிச்சை பெற்று, அந்நோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராடி வெல்லலாம் என்ற தன்னம்பிக்கையாலேயே தமது உலநலக் குறைவு தொடர்பில் பகிரங்கமாகன எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *