யாழ்ப்பாணத்தில், வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில், தனியார் காணியை ஆக்கிரமித்து, புதிய விகாரை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினார், திஸ்ஸ விகாரை என பெயரிடப்பட்டுள்ள விகாரையை அமைப்பதற்கு இன்று காலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பௌத்த சமய வழிபாடுகளை அடுத்து,விகாரை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
வலி. வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு நேற்று கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், அனுமதியின்றி நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை மீறி, சிறிலங்கா இராணுவத் தளபதியினால் புதிய விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.