முக்கிய செய்திகள்

தை மகளை வரவேற்க தயாரா? தமிழர் போற்றும் திருநாள்!

1104

உலகின் மூத்த குடிகள் உழவர்கள். அவர்கள் தாங்கள் விளைவித்த நெல் முதலான தானியங்களைக் கொண்டும், கரும்பு முதலிய பயிர்களைக் கொண்டு இறைவனுக்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவித்து கொண்டாடப்படும். அனைவரும் புது நெல் அரிசியினால் பொங்கலிட்டு வழிபாடு செய்வது சிறப்புடையது ஆகும். இது பொங்கல் பண்டிகை என்றும் கூறப்படும். தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடி மகிழப்படுகிறது.

நான்கு நாள் வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். மார்கழி மாதம் முடிந்து, தை மாதம் முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிந்து புதியன புகும் நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
இரண்டாவது நாள் சூரியப் பொங்கல் வைக்கப்படுவது வழக்கம்.

அன்றைய தினம் சூரியனுக்கு நன்றி செலுத்துவோம். பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட வேண்டும் என்று அன்றைய தினம் வழிபடுவார்கள். தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப தைத்திருநாளில் இதுவரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு கொண்டாடப்படுகிறது.

மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கல். பெயருக்கேற்ப கால்நடைகளுக்காக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வைக்கப்படும் பொங்கல் உழவுத்தொழிலுக்கு உறுதுணயாக இருந்து வரும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக படைக்கப்பட்டு அவைகளுக்கு வழங்கப்படும்.

ராஜ யோகம் பெற வேண்டுமா? பொங்கலன்று இந்த நேரத்தில் பொங்கல் வையுங்கள்!

நான்காவது நாள் காணும் பொங்கல். இது கன்னிப்பொங்கல் அல்லது கணுப்பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. பெரியோர்களின் ஆசியைப் பெறுவதற்காகவும்,குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும் விதத்திலும் உற்றார் உறவினர்களைக் காணும் நிகழ்வை முக்கியமாக கடைப்பிடிக்கும் தினம் இன்று. கிராமங்களில் சாகச விளையாட்டுகளை ஊர் கூடி நடத்தும் சுவாரசியமான தினம் இன்று என்றும் சொல்லலாம். வடமாநிலங்களில் சகோதரனுக்காக பெண்கள் இத்தினத்தில் வழிபடுவார்கள்.

களைக்கட்டும் பொங்கல்!

பொங்கல் பாரம்பரியமான பண்டிகை என்பது எவ்வளவு உண்மையோ.. அவ்வளவு உண்மை பழமை மாறாமல் இயற்கையை வணங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதும்..தை மகளை வரவேற்க தயாராவோம்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *