முக்கிய செய்திகள்

நகர சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்காக நடவடிக்கைகள்

42

நகர சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்காக ஒன்ராரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் (DOUG FORD) நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

அதன் ஒரு அங்கமாக, நகர சபைகள் தமக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்காக 500மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நகர சபைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 695மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக இந்த தொகை போர்ட் (FORD) அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து பாதுகாப்பான மீள் ஆரம்பம் என்ற ரொரண்டோ முதல்வர் ஜோன் ரொரியின் (John Tory) பரப்புரைக்கு அமைவாக நகர சபைகள் தொடர்பில் போர்ட் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *