முக்கிய செய்திகள்

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்

58

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமாகியுள்ளார்.

நெல்லை சிவா, தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நெல்லை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் கிணத்தைக் காணோம் என்ற புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியில் இவர் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

1980-களில் நடிக்க தொடங்கிய நெல்லை சிவா,குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வந்த நிலையிலேயே இன்று காலமானார்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெற உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *