முக்கிய செய்திகள்

நடிகர் அஜித் வழியை பின்பற்றும் ஜெய்

909

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெய், கார் ஓட்டுவதில் அஜித்தை வழியை பின்பற்றுவது போல், தற்போது மற்றொரு விஷயத்திற்கும் அவரை பின்பற்றி வருகிறார்.

பைக்ரேஸ், கார்பந்தயம் ஆகியவற்றில் அதிக விருப்பம் உள்ளவர் அஜித். இதில் பல்வேறு சாதனைகள் படைத்து இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி சுடுவதில் அஜித் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். மேலும் துப்பாக்கி சுடுவதற்கு முறையான பயிற்சி பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

தற்போது நடிகர் ஜெய்யும் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தான் துப்பாக்கி சுடும் புகைப்படத்தை நடிகர் ஜெய் தனது சமூக வலைத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஏற்கனவே அஜித் போல் கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட நடிகர் ஜெய், அதற்கான போட்டிகளில் கலந்துக் கொண்டிருந்தார். தற்போது துப்பாக்கி சுடுவதையும் அஜித் வழியில் பின் பற்றி வருகிறார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *