முக்கிய செய்திகள்

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்

380
கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்.
மருத்துவரான இவர் தமிழில் வெளியான வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சென்னையில் பிரபல தோல் மருத்துவராக பணியாற்றி வந்த இவர், மாரடைப்பின் காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது.
இவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *