முக்கிய செய்திகள்

நயன்தாரா, சுருதிஹாசன் வழியில் காஜல் அகர்வால்

1147

கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வரை நடிகைகளுக்கு நடிப்பதை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஜோடியாக நடிப்பதை குறைத்துவிட்டு தனி கதாநாயகியாக நடிக்க தொடங்கும்போது தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தயாரிக்க பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதுபோன்ற சூழ்நிலைகளில் நடிகைகளே தயாரிப்பாளர்களாக களம் இறங்க வேண்டிய சூழல் உருவாகும். நயன்தாரா, சுருதிஹாசன், சமந்தா வரிசையில் தயாரிப்பாளராக மாற இருக்கிறார் காஜல் அகர்வால்.

தென் இந்தியாவில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டு தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துவருகிறார் காஜல். இதற்கு பிறகு தான் நடிக்க இருக்கும் படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். #KajalAggarwal #ParisParis




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *