முக்கிய செய்திகள்

நல்லூர் பிரதேச சபையை ரெலோவிடம் வழங்க இலங்கை தழிழ் அரசு கட்சி சம்மதம்

110

நல்லூர் பிரதேசசபையை ரெலோவிடம் வழங்க இலங்கை தழிழ் அரசு கட்சி சம்மதித்துள்ளது.

ரெலோவினால் தவிசாளராக பிரேரிக்கப்பட்ட மதுசுதன் அந்த பதவிக்கு பொருத்தமற்றவர் என்ற போதும், ரெலோவின் வற்புறுத்தலால் இந்த இணக்கப்பாட்டிற்கு வருவதாக தமிழ அரசுக்கட்சி அரை மனதுடன் அறிவித்தது.

நல்லூர் பிரதேசசபை தவிசாளர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் இடம்பெற்றது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், பொ.கனகசபாபதி ஆகியோரும், ரெலோ சார்பில் சுரேன், விந்தன் கனகரட்னம் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது, கோப்பாயில் தியாகராஜா நிரோஷ் மீது குறைகள் இல்லாத நிலையில் எதற்காக மாற்றம் செய்ய வேண்டும், ஆகவே நல்லூரை தாமே வைத்திருப்பதாக தமிழ் அரசு கட்சி கூறியது. எனினும், ரெலோ மறுத்தது.

எனினும் நல்லூருக்கு பதிலாக கோப்பாய் பிரதேசசபையை உடனடியாக தமிழ் அரசு கட்சியிடம் ஒப்படைக்கும்படி கூறப்பட்டது. இதற்காக எழுத்துமூல ஆவணமொன்றை தயாரிக்கலாமென தமிழ் அரசு கட்சி கூறியபோது, அப்படியொரு ஆவணம் தேவையி்லை, தாம் சொன்னபடி செயற்படுவோம் என ரெலோ குறிப்பிட்டது.

அடுத்த ஜனவரி 10ஆம் திகதிக்குள் நிரோஷ் பதவிவிலகுவார் என ரெலோ உறுதியளித்தது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *