பாதுகாப்பு அமைச்சுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இருந்து, ராகுல் வெளிநடப்புச் செய்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், முப்படைகளின் சீருடை குறித்து, விவாதிக்கப்பட்டது.
அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் குறுக்கிட்டு, ‘தேசிய பாதுகாப்பு குறித்து, லடாக் எல்லையில் இருக்கும் படையினரை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்க வேண்டும்’ என, கருத்து தெரிவித்தார்.
இவரது கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இதையடுத்து, ராகுல் உள்ளிட்ட, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
சீன எல்லையான லடாக் பிரச்சினை நாட்டின் பாதுகாப்பு, இந்திய படையினரின் உயிர்பாதுகாப்பு ஆகியன பற்றி விவாதிக்காமல் சீருடையை மாற்றுவது தொடர்பாக விவாதிப்பது நேரத்தை வீணடிப்பதற்கு சமம்.
இதை பற்றி எனக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை. ஆகவே கூட்டத்தை நான் புறக்கணித்து விட்டேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.