முக்கிய செய்திகள்

நானும், திருமதி அனந்தி சசிதரனும் பயணித்த வாகனத்தை பெரும்பான்மையினர் தாக்கினர்

203

பேரணி வரும் வீதிகளில் ஆணிகளை வைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை தடுத்து நிறுத்தும் மிக மோசமான முயற்சிகள் இன்று இடம்பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“இதனை யார் செய்தார்களோ தெரியாது. நாங்கள் உங்களை அடிக்க வரவில்லை. குழப்பம் செய்ய வரவில்லை. நியாயம் கேட்டே செல்கிறோம்”. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை திருகோணமலை- மடத்தடிச் சந்தியில் வைத்து நானும், திருமதி அனந்தி சசிதரனும் பயணித்த வாகனத்தை பெரும்பான்மையினர் தாக்கினர் என்று சிவாஜலிங்கம் தெரிவித்தார்.

இவ்வாறு தாக்குதலை நடத்தியவர்களின் கைகளில் பெற்றோல் போத்தல்களை அவதானிக்க கூடியதாக இருந்தது. மேலும் காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் இருந்த வேளையில்தான், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் விழ விழ எழுவோம், வீருகொண்டு எழுவோம் என்றதன் அடிப்படையிலேயே நாங்கள் இந்த பயணத்தை தொடர்வோம். மேலும் இத்தகைய தாக்குதலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *