முக்கிய செய்திகள்

நான்கு நாட்களில் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

172

நான்கு நாட்களில் 95 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவினால் வழங்கப்பட்ட  5 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பு மருந்தை, செலுத்தும் பணி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியிருந்தது.

நேற்று நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் பணியின் போது, ஒரே நாளில், அதிகபட்சமாக 36 ஆயிரத்து 316 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 29ஆம் திகதிக, 5 ஆயிரத்து 286 பேருக்கும்,  30ஆம் திகதி, 32 ஆயிரத்து 539 பேருக்கும்,  31ஆம் திகதி, 21 ஆயிரத்து 329 பேருக்கும், கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் ஏற்றப்பட்டன.

இதையடுத்து. நேற்று வரை, 95 ஆயிரத்து 550 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது முன்களப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும், இராணுவத்தினருக்குமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசியினால் இதுவரை எவருக்கு பாரதூரமான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக தடுப்பூசி போடுவதால் ஏற்படும், காய்ச்சல், வீக்கம் போன்ற சிறியளவிலான பாதிப்புகள் சிலருக்கு உள்ளதாகவும், சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது,
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *