தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் நடைபெறும் எழுச்சிப்போராட்டங்களுக்கு சமாந்தரமாக கனடிய மண்ணிலும் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
நேற்றையதினம் போராட்டம் நடைபெற்ற Yonge-Dundas உள்ள டண்டாஸ் சதுக்கத்தில் இன்றும் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது மாலை ஐந்து மணி வரையில் நடைபெற்றிருந்தது.
இதன்போது தயாகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், இனப்படுகொலை சிறிலங்கா அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நாளைய தினம் உலக மகளீர் தினத்தினை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு நீதி கோரி வாகனப்பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.
கனடா தமிழ் மகளிர் அமைப்பினால் நடாத்தப்படும் வாகனப்பேரணி, MARKHAM & STEELES இல் ஆரம்பிக்கவுள்ள மை குறிப்பிடத்தக்கது.