உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் நினைவுத்தூபி வெறும் கல்லும் மண்ணுமல்ல, அது தமிழர்களின் உணர்வு என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
ஆத்மார்த்தமாக தமிழரின் பிரச்சினையைப் புரிந்து விளங்கிக்கொள்ளாத யாரிடமிருந்தும் தமிழருக்கான திருப்திகரமான தீர்வு கிடைக்காது இந்தத் தத்துவத்தை நடைமுறையில் பல்வேறு எடுகோள்களையும் உதாரணங்களையும் கண்முன்னால் நிகழ்கின்ற நிகழ்வுகளின் அடிநாதத்திலிருந்தும் எடுத்துக்காட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாட்டில் தமது உரிமைகளை உறுதிப்படுத்த இறுதித் தேர்வாக ஆயுதப் போரைத் தேர்வு செய்து போராடிய மக்கள் குழுமத்தைத் தோற்கடித்துவிட்டு வெற்றிச் சின்னத்தை நிறுவி அதைக் கொண்டாடும் மனநிலையில் இருக்கின்ற மக்களின் எண்ணப்பாட்டில் மாற்றம் வராத வரைக்கும் தமிழரின் பிரச்சினையின் அடிநாதத்தை இவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.